பிரபலமான விஜய் டிவியில் கடந்த மே மாதத்திலிருந்து பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்களில் பிக்பாஸில் இடம்பெற்ற பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்களில் வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இரண்டு மாதம் பழமையானது என்றாலும் வனிதா மிகவும் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தியதாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரபல பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளரான வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்திற்கு தான் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் மிகவும் நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல திறமையான நடிகர் பாடகர் நகுல் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தனர்.
அந்த அறிக்கையில் பிபி ஜோடிகளில் தனது காளி அவதாரம் குறித்த உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் ஊடகங்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறினார். நான் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்று அறிவிப்பதற்கு முன்பு நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் அனைவரும் காண வேண்டும் என்று விரும்பினேன். நான் யாரிடம் இருந்தும் கொடுமைப்படுத்துதல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபர். யாராக இருந்தாலும் அவர்கள் எனது சொந்த குடும்பமாக இருந்தாலும் கூட நான் எவற்றையும் ஏற்றுக் கொள்ளாதவர் என்று இந்த உலகம் முழுவதும் தெரியும். விஜய் டிவி எப்பொழுதும் எனது குடும்பம் போல குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு தோற்றங்களில் நான் வந்துள்ளேன்.
ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை வைத்து இருக்கிறோம். ஆனால் அது எப்போதும் இருக்கும். ஆனால் பணியிடத்தில் தொழில் மற்றும் நெறி முறையற்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈகோ பிரச்சினை காரணமாக எனது தொழில் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மிரட்டலால் நான் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்திய நியாயமற்ற முறையில் நடத்தபட்டென். ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் பெண்கள் பொறாமைப்படுவது நம் முயற்சிகளை வாய்ப்புகளை அழிக்க முயற்சிப்பது மிகவும் மோசமானது. ஊரடங்கு கிட்டதட்ட முடிவடைந்ததால் நான் திரைப் பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறேன் . படங்களிலும் டிவி சீரியல்களிலும் புதிய நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து என்னைப் பார்ப்பீர்கள் என்று வனிதா கூறியுள்ளார்.
மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி அவருக்காக மிகவும் வருந்துகிறேன், என்னால் தான் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் நிலைமை வந்தது. ஆனால் அவர் என்னுடைய உண்மையான பார்ட்னர் என்று முடித்துள்ளார்.