ரூ. 4000 வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது?

0
60

மத்திய அரசு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை படிக்கவும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது.

 

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும், பிரதமரின் விவசாயிகளுக்காக விவசாய நிதி உதவி தரும் திட்டத்தின் கீழ் மிகவும் நலிவடைந்த விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் மூன்று மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடம் இருந்து பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த நிலையில் இது எட்டாவது தவணை பெற மே 14-ஆம் தேதி பிரதமர் மோடி 9.5 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு 19,000 கோடி தொகையை செலுத்தி உள்ளார்.

 

ஆனால் இந்த எட்டாவது தவணை இந்த தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தொகையை பெற வேண்டும் என்று நினைக்கும் விவசாயிகள், விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய கால அவகாசம் தந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் விவசாயிகள் சீக்கிரமாக சென்று பதிவு செய்தால் மட்டும் இந்த தொகையை பெற முடியும் என்று சொல்லியுள்ளது.

 

அதுமட்டுமின்றி அவ்வாறு பதிவு செய்வோருக்கு எட்டாவது தவணையும் ஒன்பதாவது தவணையும் சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி அவர்களுக்கு 4000 கிடைக்கும். இந்த நிதி உதவியை பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லாமல் இந்த திட்டத்தில் விவசாயிகள் கண்டிப்பாக நிதி உதவி பெற முடியாது. விவசாயிகள் தங்களது ஆதார் மற்றும் இணைத்து இருந்தால் மட்டுமே நிதி உதவி வழங்கப்படும். தங்கள் பெயரை இணைத்து இருந்தாலும் ஆதார் முறையாக இணைக்காவிட்டால் நிதி உதவி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்னிலையில் உங்களது பெயர் இந்த திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ளதா இந்த மாதத் தவணை உங்களுக்கு வருமா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.

 

1. pmkisan.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

2. கீழே உள்ள Farmers corner என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

3. அங்கு New Farmer registration , Edit, beneficiary status , beneficiary list, updation என்று ஆப்ஷன்கள் இருக்கும்.

4. அதில் beneficiary list, என்ற பட்டனை அழுத்தவும்.

5. அதில் முதல் உங்கள் மாநிலம், பிறகு மாவட்டம் , பிறகு வட்டம், பிறகு எந்தப் பகுதி, என்று நீங்கள் தேர்வு செய்த பிறகு report என்ற பட்டனை அழுத்தியவுடன் இந்த மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெறும் விவசாயிகளின் பெயர்கள் வரும்.

author avatar
Kowsalya