சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? – வைரலாகும் பதிவு
சித்தி ஸ்ரீதேவியுடன் பிக்பாஸ் 7 சீசனில் வனிதா மகள் ஜோவிகா களமிறங்க இருப்பதாக தகவல் தீயாய் பரவி வருகிறது
6 சீசன்களை காட்டிலும் இந்த 7-வது சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியானது. அந்த புரோமோவில், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வீடு இருந்து வந்தது. ஆனால், 7வது சீசனில் 2 வீடு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முன்பே ரஞ்சித், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா நாயர், ஜாக்குலின், நட்சத்திரா, நடிகை பரீனா, விஜே அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது.
அந்த வகையில், இந்த பிக் பாஸ் சீசனில், மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பிக்பாஸ் சீசன் 7-ல் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை வனிதா மகள் களமிறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகை வனிதா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் உலக அழகி ஜோவிகாவே, உன்னை நான் நேசிக்கிறேன், நீ என்ன செய்தாலும், கடவுள் அருள் உன்னிடம் நிறைந்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒருவேளை சித்தி ஸ்ரீதேவியுடன் இணைந்து வனிதா மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.