திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

Photo of author

By Sakthi

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தில் தான் சுமார் 22 வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள்.சுமார் 40 ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆட்சிக் காலங்களில் இதற்கான கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வந்தது. ஆனாலும் இதுவரை யாருமே இந்த இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தெரிவித்துவிட்டு பல சமூகங்களை ஒன்றிணைத்து அதற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்று தெரிவித்துவிட்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுத்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தது.ஆனால் அந்த இட ஒதுக்கீட்டால் வன்னியர் இன மக்களுக்கு எந்தவிதமான சலுகையும் பயணம் கிடைத்தபாடில்லை இன்றுவரையில் அரசுத்துறைகளில் எந்த ஒரு பெரிய பதவியையும் வன்னியர் இன மக்கள் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டியலை பார்த்தோமானால் அந்தப் பட்டியலில் ஒரு வன்னியர் இன நீதிபதி கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைசியாக இருந்த வன்னியர் இனத்தைச் சார்ந்த ஒரே ஒரு நீதிபதி சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த விதத்தில் நீதித்துறையில் வன்னியர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இப்படி அரசுத்துறைகளில் எந்த பதவியிலும் பெரிய அளவில் வன்னியர்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடாக 10.5% வழங்கி தமிழக சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக நீதிமன்றங்கள் வரையில் சென்று பார்த்தார்கள். ஆனாலும் சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை நாங்கள் ரத்து செய்ய இயலாது என்று நீதிமன்றம் கைவிரித்து விட்டது.இதையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த வன்னியர் சமூக மக்கள் ஒரு அதிரடி முடிவை தற்சமயம் எடுத்திருக்கிறார்கள்.

அதாவது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பழைய அரசமங்கலம் என்ற கிராமத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி அந்த மாவட்டம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அந்த சுவரொட்டியின் மூலமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்த அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு எங்களுடைய வாக்கு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் எங்கள் கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வர தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதேபோல தமிழகம் முழுக்க இருக்கின்ற வன்னியர்கள் எல்லோரும் திமுகவை புறக்கணித்து வருவதால் அந்த கட்சி கடந்த 10 வருட காலத்தை கடந்து ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பதால் இந்த முறையும் ஆட்சிக்கு வருவோமா வர மாட்டோமா என்கிற ரீதியில் இருப்பதாக சொல்கிறார்கள்.