வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

0
188
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார்.

அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.குறைந்தது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாவது கொடுத்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி என்று உறுதியாக கூறியிருக்கிறார்.அதிமுக சார்பில் பேச்சு வார்த்தைக்கு சென்ற அமைச்சர்களும் இது குறித்து வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் அப்போது சட்டமன்ற தேர்தலை நடத்த தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாலும் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.சட்டபேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறிய நிலையில் இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தான் தமிழக அரசு 3 மணிக்கு சட்ட பேரவை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானால் தமிழக அரசால் எதையும் அறிவிக்க முடியாது என்பதால் அதற்கு முன்னதாகவே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
Next articleஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!