பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்
தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது.
தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக போட்டியிட 41 தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்கப்படுகிறது. அதேபோல் முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கை அதிமுக தரப்பில் நிராகரிக்கப்பட பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனி இட ஒதுக்கீடு என்ற கொள்கையை தளர்த்தி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு ஆவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் இந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில் கடுப்பான ராமதாஸ் ஜனவரி 30-ம் தேதிக்கு முன்பு வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு எதுவும் அதிமுக தரப்பிலிருந்து அறிவுப்பு வரவில்லை எனில் ஜனவரி 31ம் தேதி பாமக நிர்வாக குழு கூட்டம் நடத்தி அதிமுக அரசுடன் கூட்டணியில் இருக்கலாமா அல்லது வெளியேறலாமா என்ற முடிவு அறிவிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு யார் உள் இட ஒதுக்கீடு தருகிறார்களோ அதாவது திமுக அல்லது அதிமுக அரசு எந்த கட்சி இட ஒதிக்கீடு தருவார்களா அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்று பாமகவின் தலைவர் ஜிகே மணி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் அதிமுக அரசுடன் கூட்டணி வைத்து தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.நடராஜன் தோல்வியை சந்தித்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு மோடி அமைச்சரவையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து கௌரவித்தார்கள்.
இந்நிலையில் ஜி.கே வாசன் அவர்களும் பாமகவிற்கு ஆதரவாக அதிமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.அதாவது அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாமக கட்சியின் இட ஒதுக்கீடு கோரிக்கையை எடப்பாடி அரசு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதே போல புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிரிஷ்ணமூர்த்தி அவர்களும் பாமகவின் கோரிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிமுக கட்சியின் பல்வேறு அமைச்சர்கள் வன்னியர்களின் உள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது த.மா.கா கூட்டணி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.அதிமுக அரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரவில்லை எனில் வட மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறுவது கடினம் தான் என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.மேலும் ஒரு வேளை பாமக திமுகவுடன் கூட்டணி வைத்தால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைவது உறுதி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.