இட ஒதுக்கீடு! தமிழகம் முழுவதிலும் கொண்டாட்டத்தில் வன்னியர்கள் அதிர்ச்சியில் திமுக!

0
135

சமீபத்தில் தமிழக சட்ட சபையில் வன்னியர் சமூக மக்களுக்காக தனி இட ஒதுக்கீடு ஆக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக நிறைவேற்றியது அதிமுக அரசு. இதற்கு ஆரம்பம் முதலே உந்துதலாக இருந்தது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் தான். சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த கோரிக்கையை தமிழகத்தில் ஆண்டுகொண்டிருந்த எல்லா கட்சிகளிடமும் வைத்து வந்தது.

ஆனாலும் இதனை பெரிய அளவில் இதுவரையில் எந்த ஒரு ஆளும் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தற்சமயம் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்த்து வன்னியர்களுக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு ஆக 10.5% கொடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்து சட்டம் போட்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சமூக மக்களின் நீண்ட கால கோரிக்கையான இந்த கோரிக்கையை அதிமுக அரசு பாட்டாளி மக்கள் கட்சியின் துணையோடு நிறைவேற்றி இருப்பது வன்னியர் சமூக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் அந்த மக்களுக்கு இடையில் மிகப் பெரிய எழுச்சியையும் உண்டாக்கி இருக்கிறது.
ஆகவே இட ஒதுக்கீடு கொடுத்த ஆளும் கட்சியான அதிமுகவையும் அதற்கு உறுதுணையாக நின்று சட்டத்தை நிறைவேற்ற உந்துதலாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியையும் அந்த சமூக மக்கள் தமிழகம் முழுவதிலும் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை கொண்டாடும் விதமாக வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று இனிப்புகளை கொடுத்து இட ஒதுக்கீடு கிடைத்திருப்பதன் அவசியம் மற்றும் நன்மை என்னவென்று பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார்.அரியலூர் மாவட்டம் தா பழூர் ஒன்றியம் கீழசிந்தாமணி உடன்குடி, ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி, போன்ற பகுதிகளில் பொதுமக்கள் இடையே உரையாற்றிய வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வைத்தி அவர்கள் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உரையாற்றி இருக்கின்றார்.

அப்போது அவர் பேசியதாவது இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஆனால் இந்த இட ஒதுக்கீடு கிடைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யா அவர்களும் இதுவரையில் எவ்வளவு துன்பங்களையும் போராட்டங்களையும் சந்தித்தார்கள் என்று பொதுமக்களிடம் எடுத்து கூறினார் அதேபோல ஆரம்ப காலத்திலிருந்தே வன்னியர் சமூக மக்களுக்கு உறுதுணையாக இருந்து இன்று அவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு சுமார் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் இந்த இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்திருக்கும் மருத்துவர் ஐயா அவர்களுக்கும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்த தலைவர்கள் எல்லோருக்கும் நன்றியையும் தெரிவித்து இருக்கின்றார்.

அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் அந்த கட்சி தொண்டர்கள் மட்டும் அல்லாது அதில் பங்கேற்ற அனைத்து பொது மக்களுக்கும் என்னுடைய நன்றி என தெரிவித்திருக்கிறார்.இதேபோல தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டமாக இட ஒதுக்கீடு கிடைத்ததைத் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினர் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பொது மக்கள் எல்லோரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சமூகம் இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது திமுகவை நடுநடுங்க வைத்து இருப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால் வன்னியர் சமூகம் என்பது ஒரு மிகப்பெரிய சமூகம் கிட்டத்தட்ட 2 கோடி வன்னியர்கள் இருக்கும் ஒரு மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சமூகம் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவாக ஒன்றிணைந்து நின்றால் தமிழகத்தில் திமுக ஒரு கல்லைக் கூட அசைக்க இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி ஒன்று தான் இந்த தேர்தலில் நடக்கப் போவதாக தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதனை இதுவரையில் இருந்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்றிணைந்து பாட்டாளி மக்கள் கட்சி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த இட ஒதிக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த தேர்தலில் வன்னியர் சமூக மக்கள் அனைவரும் நிச்சயமாக அதிமுக பக்கம் தான் இருப்பார்கள் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. இதனை தெரிந்துகொண்ட எதிர்க் கட்சியான திமுக அவர்களின் வாக்கை பெறுவதற்காக ஒரு சில சித்து வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனாலும் இந்த முறை திமுக குட்டிக்கரணம் போட்டாலும் கூட வன்னியர்களின் ஓட்டை பெறமுடியாது என்று சொல்லப்படுகிறது.

Previous articleதமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்
Next articleதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!