ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

Photo of author

By Sakthi

தமிழ்சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதனையடுத்து கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல துணிச்சலான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகை வரலட்சுமி.

அவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகை வரலட்சுமி வசம் காட்டேரி, கலர்ஸ், யானை, பாம்பன் போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது, இவ்வாறு பிசியாக இருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வரலட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் அவ்வப்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்திருந்தார். இந்த நிலையில், நடிகை வரலட்சுமி தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியை தன்னுடைய மகன் என்று தெரிவித்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த காணொளி காட்சி அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.