தடுப்பூசிகள் போதுமான கையிருப்பு இல்லை! சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு

0
66

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் நிலையிலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என கூறினார்.

மேலும் சுகாதார துறை செயலாளரும் நானும் போகின்ற இடம் எல்லாம் அனைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் அரசுக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று சற்றே அதிகமாக உள்ள கோவை மாநிலத்தில் முதல்வர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகவும், 25 லட்சம் தடுப்பூசிகள் தர இருந்த நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது என்று கூறினார்.