வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!

0
95

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!

விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படம் வாராசடு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

விஜய்யின் தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. ஜனவரி 11 ஆம் தேதி அல்லது ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை தெலுங்கில் தமிழில் ரிலீஸ் செய்யும் அதே நாளில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோரின் படங்கள் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸாகின்றன. இதனால் விஜய் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது இறுதி நேரத்தில் சிரஞ்சீவியில் வால்டேர் வீரய்யா படமும் சங்கராந்தி ரிலீஸை உறுதி செய்துள்ளது.

அதே சமயம் தமிழிலும் வாரிசு ரிலீஸ் ஆகும் நேரத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் போட்டிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனால் இரண்டு மொழிகளிலும் வாரிசு திரைப்படம் கடுமையான போட்டியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.