வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

Photo of author

By Parthipan K

வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

Parthipan K

Varisu movie hot update! Fans excited!

வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகரில் ஒருவர் தளபதி விஜய்.இவர் ரசிகர்கள் மனதில் நீங்கத இடம்பெற்றுள்ளார்.பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது வரவிருக்கும் திரைப்படம் வாரிசு.இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜி தயாரித்துள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி  பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை விஜய் ரசிகர்கள் எதிர்பார்துக்கொண்டுள்ளனர்.விஜய்யுடன் முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து மூன்றாவது பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் வரும் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலிப் சுப்ராயன் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.

அப்போது அவர் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிக பயங்கரமாக உள்ளது எனவும்.அதில் செம மாஸ் காட்சி இடம்பெற்றிருக்கும் என்றும் அந்த  பேட்டியில் தெரிவித்துள்ளார்.இவர் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.