வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

Photo of author

By Vinoth

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக விஜய் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் தமன்.

விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக  வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் வெளிநாட்டில் வசிக்கும் ஆப் டெவலப்பராக நடிக்கிறாராம். மேலும் அவரின் கதாபாத்திரத்துக்கு ‘விஜய் ராஜேந்திரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தின் பாடல்கள் பற்றி இசையமைப்பாளர் தமன் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ விஜய் படம் என்றாலே பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்குமா?. அதுபோல விஜய்யின் நடனமும் எதிர்பார்க்கப்படும். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்தும் எமோஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.