வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா!

0
367
Varisu Movie New Update! Is this the name of Thalapathy Vijay!
Varisu Movie New Update! Is this the name of Thalapathy Vijay!

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா!

தற்போது விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

 மேலும் கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அத்துடன் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது முதல்முறையாக அப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி வாரிசு படத்தில் விஜய்யின் பெயர் ராஜேந்திரன் என்றும் இதில் விஜய் அப்ளிகேஷன் டிசைனராக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleவீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? வெளியான அறிவிப்பு 
Next articleவிபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு