மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

0
111

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இன்னும் ஒரு ஆக்‌ஷன் காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடந்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது மீண்டும் வாரிசு படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பாடல் ஒன்றுக்கு விஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடனமாடும் அந்த காட்சி இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு ஷாக் அளித்துள்ளது.

முன்னதாக படம் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. அதைத் தடுக்க படப்பிடிப்பு தளத்துக்குள் யாரும் மொபைல் போன் எடுத்துவரக் கூடாத் என இயக்குனர் வம்சி தடை போட்டதாக செய்திகள் வெளியாகின. அப்படி இருந்தும் இப்போது இந்த வீடியோ லீக் ஆகியுள்ளது.