“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Photo of author

By Vinoth

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

உதயநிதி ஸ்டாலின் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். துணிவு ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் உதயநிதி நேரடியாக ரிலீஸ் செய்வதால் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குதான் கூடுதலாக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் “துணிவு படத்துக்கு அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை. வாரிசு படமும் வருவதால் இரண்டு படங்களுக்கும் சமமான திரைகள்தான் ஒதுக்கப்படும். இதற்கும் முன்பும் இதே போல படங்கள் ரிலீஸ் ஆகி இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன.” எனக் கூறியுள்ளார்.

வாரிசு படத்தையும் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின்தான் ரிலீஸ் செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை வாங்கியுள்ள லலித், ரெட் ஜெயண்ட் மூலமாகதான் அந்த படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.