அரசியல் வாரிசு என்கிற அடையாளத்தோடு இருந்தவர் கல்லூரி படிப்புக்கு பின் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதன்பின் புதிய படங்களை வாங்கி வெளியிட துவங்கினார். கழக ஆட்சியில் மட்டுமே இவரின் நிறுவனம் ஆக்டிவாக இருக்கும். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். நடிப்பும் வரவில்லை. நடனமும் வரவில்லை என பலர் கிண்டலடித்தும் அவர் மாறவில்லை. காமெடி நடிகரை கூட வைத்து ஒப்பேற்றி வந்தார்.
சீனியர்கள் பலரும் இருக்க குறுகிய காலகட்டத்திலேயே பெரிய பதவியை இவருக்கு கொடுத்தார் அப்பா. ஆனால், பொறுப்பு மிக்க பதவி கொடுத்த பின்னரும் இவரின் ஆர்வம் இன்னமும் சினிமாவில்தான் இருக்கிறதாம். வியாபாரத்தை காரணம் காட்டி தினமும் ஒரு படம் பார்க்கிறாராம். அந்த படம் பற்றிய வியாபரம் பேசவே அதிக நேரத்தை செலவிடுகிறாராம். ‘இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தும் இப்படி இருக்காரே’ என அவருக்கு நெருக்கமானவர்களே ஆதங்கப்படுகிறார்களாம்.
பகல் முழுக்க தூங்கி இரவில் படம் பார்த்து மீண்டும் பகல் முழுக்க தூங்குவதால்தான் சட்டசபைக்கு இவர் அடிக்கடி வருவதில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஒருபக்கம், தேர்தலுக்குள் ஒரு படத்தில் நடியுங்கள் என சில இயக்குனர்கள் அவரை சந்தித்து கதைகளையும் சொல்லி வருவதுதான் இதில் கொடுமை.
அரசியல்னா காலையில மீட்டிங் இருக்கும். கட்சிகாரர்கள் பார்க்க வருவார்கள். பலர் சந்தித்து சால்வை போடுவார்கள். தலைமைச் செயலகம் போக வேண்டும். அதிகாரிகளை சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். அலுவல் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் எழுந்திருக்க வேண்டும்.
ஆனால், சினிமா எவ்வளவு ஈசி? மாலை 4 மணிக்கு எழுந்தால் விடிய விடிய படம் பார்க்கலாம். இயக்குநர்களை வரச் சொல்லி இரவில் கதை சொல்லச் சொல்லலாம். பார்ட்டியெல்லாம் முடித்து விட்டு, காலை 5 மணிக்கு தூங்க போகலாம்’ என சமூகவலைத்தளங்களில் இவரை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.