ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

0
209

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

இயக்குனர் வசந்தபாலன் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் அவருக்கு கவனத்தைப் பெற்று தந்தது. அதற்கு முன்பாக அவர் இயக்கிய ஆல்பம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. வெயில் திரைப்படம் மூலமாகதான் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து ஜெயில் திரைப்படத்தில் பணியாற்றினர்.

இப்போது வசந்தபாலன் தன்னுடைய நண்பர்களோடு இணைந்து அர்பன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக ‘அநீதி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது அவர் ஓடிடிக்காக ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

ஜி 5 தளத்துக்காக அவர் இயக்க உள்ள வெப் தொடருக்கு நடிப்பதற்கு நடிகர் நடிகைகள் தேவை என்ற அறிவிப்பை அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வசந்தபாலன் போலவே தியாகராஜன் குமாரராஜா மற்றும் எழுத்தாளர் சுகா ஆகியோரும் ஓடிடிகளில் சீரிஸ்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

Previous articleவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகிலஇந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
Next articleகணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here