திமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!

0
141

தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுகவுடனான பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததன் காரணமாக திமுகவுடனான பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நாங்கள் புறக்கணிக்கவில்லை திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணம் செய்யும் மூன்றாவது அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிணைந்து பயணம் செய்ய வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்வியே தேவை இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் திமுக சார்பாக கொடுக்கப்படும் தொகுதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பான விவரங்கள் வெளியே தெரியவர ஆறு தொகுதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் முழக்கம் எழுப்ப தொடங்கினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டு முழக்கமிட்டதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எங்கள் கட்சியின் சார்பாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது எங்கள் கட்சியின் நன்மை சார்ந்து இருக்கும் எனவும், அதேபோல யாரும் எந்தப் போராட்டத்திலும் ஈடுபட தேவையில்லை கட்சியின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Previous articleசசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!
Next articleநான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!