விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ்! அதிர்ச்சி தகவல்

Photo of author

By Parthipan K

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே மிரட்டிய 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ்.

ஆபாச வீடியோக்கள் எடுத்து 40 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 42 வயதான இவர் 2 ஆட்டோக்களை சொந்தமாக வைத்துள்ளார்.

இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் ஒரு இளைஞரை ஓரினச்சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் வந்தது. இதையடுத்து, மோகன்ராஜை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, சமூக வலைதளங்களில் கல்யாணம் ஆன பெண்ணை மோகன்ராஜ் மிரட்டி, தாக்கி, கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் வெளியானது. இதனால் மோகன்ராஜ் செல்போனை பிடுங்கி பார்த்தபோது, 7 பெண்களை இப்படியே நாசம் செய்த வீடியோ இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அதன்பிறகுதான் விசாரணை தீவிரமானது.

விசாரணையில் இவர், இளம்பிள்ளை விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் பேச்சு தந்து, செல்போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைத்துள்ளார். இப்படியே 40-க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் நாசம் செய்துள்ளார்.

கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவியும் இதில் அடங்குவர். தன்னிடம் சிக்கும் பெண்களை நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார் மோகன்ராஜ் ஒருசில பெண்கள் இவனுக்கு பயந்து ஊரைவிட்டே போய்விட்டார்கள் என்பதும் போலீசார் அந்த பகுதியில் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமில்லை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயரை சொல்லிதான் பல பெண்களை மிரட்டி இருக்கிறார் என்றும் தெரியவந்தது.
ஆனால், மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தியதால் அவரை கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி நீக்கிவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.