பெண்களை மிரட்டி கற்பழித்த விசிக மோகன்ராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சேலம் மகளிர் காவல்துறையினர் அதிரடி

Photo of author

By Parthipan K

பெண்களை மிரட்டி கற்பழித்த விசிக மோகன்ராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சேலம் மகளிர் காவல்துறையினர் அதிரடி

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக இருந்தார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு ஆட்டோவை தானே ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

விசிக பிரமுகர் மோகன்ராஜ்
கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிந்தது, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும் 30 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததாகவும் தெரியவந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட செங்கல் சூளை வேலைக்கு சென்ற ஒரு பெண் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் ரூ. 2000 ரூபாய் கடனுக்காக மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல், ஆபாச படம் எடுத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் விசிக பிரமுகர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மணிகண்டன் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். உடனடியாக சேலம் ஆணையர் செந்தில் குமார் உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.