அந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி

0
145

பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின்போது கூறினார்.

நிர்மலா சீதாராமன் கூறிய இந்த கூறு தவறு என்றும், சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு என்றும் ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

Previous articleசனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்
Next articleநீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!