ரெய்டு என்ற பெயரில் ஜனநாயகத்தை நசுக்குகிறார்கள்! கதறும் திருமாவளவன்!

0
81

நேற்றைய தினம் நாடு முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டது. ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ் டி பி ஐ போன்ற அமைப்புகளின் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா எஸ் டி பி ஐ போன்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அதேபோல இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவை, கடலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் இந்த அமைப்புகளின் தலைவர்கள் செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இதுவரையில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் இதனை எதிர்க்கும் விதமாக நேற்றைய தினம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றதாக தெரிகிறது.

இப்படியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த சோதனைக்கு எதிராக வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அவற்றின் மூலமாக சோதனை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உடைய வீடுகளில் மற்றும் அவர்கள் சார்ந்த இடங்களிலும் நுழைந்து அவர்களை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு விரோத போக்கை கடைபிடிக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் தேசிய புலனாய்வு முகமையை பொறுத்தவரையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடாத எந்த ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ சோதனை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவேளை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவோ தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தால் அதனை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டியது அந்த அமைப்பின் கடமை.

அப்படி இருக்கும் பட்சத்தில் திருமாவளவன் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

திமுக உள்ளிட்ட அந்த கட்சியின் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இஸ்லாமிய அமைப்புகளுக்கும் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இருந்தாலும் அந்த இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த அமைப்புகள் பக்கம் நின்று அரசுக்கு எதிராக முழக்கம் இடுவது ஏற்கத்தக்கதல்ல என்பதை அந்த கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாக இந்து மத நம்பிக்கைகளையும் இந்து மத கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன அதனை இதுவரையில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட திருமாவளவன் வரையில் யாரும் கண்டித்தது இல்லை.

ஆனால் இந்த சோதனையை மட்டும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு எதிராக இருக்கிறது என்பதற்காகவே எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களுடைய சித்தாந்தம் தான் என்ன என்பதை இதுவரையில் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நாம் அனைவரும் தமிழகத்தில் இருப்பதில் எந்தவித பயனுமில்லை.