பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

Photo of author

By Anand

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

Anand

Updated on:

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

 

ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே நிலத்தை மதிவானன் என்ற தரகர் மூலமாக வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.இதனையடுத்து பாதிக்கபட்ட சுசீலா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.