அடங்கமறு! அத்துமீறு! பாணியில் செய்தியாளரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் விசிகவினர்

0
216

அடங்கமறு! அத்துமீறு! பாணியில் செய்தியாளரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் விசிகவினர்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவுடிகளால் முத்துக்கடை பகுதியில் நடுரோட்டில் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்கள் மற்றும் செய்தியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இந்து மத நம்பிக்கையை கேவலப்படுத்தும் விதமாக பேசியது இந்து மதத்தினர் இடையே தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்துமதத்தையும் அதன் ஆன்மீக நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தும் விதத்தில் பேசி வரும் திருமாவளவன் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியருமான குணசேகரன் என்பவர் கடந்த 15 ஆம் தேதி முகநூலில் தொல்.திருமாவளவனை விமர்சித்து பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

இந்த பதிவினால் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ்,காரை.தமிழ்,மற்றும் நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் அவர்கள் முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவுடிகளால் வழிமறித்து நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் அருவாள் வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியதை தட்டிக்கேட்க முயன்ற காவல்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கில் இதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் குண்டா(எ)சார்லஸ், பத்திரிகையாளர் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார்.

விசிக கட்சியினரால் செய்தியாளர் தாக்கப்பட்ட காணொளி:

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள YouTube சேனல் மூலம் பின் தொடருங்கள்

Previous articleபெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
Next articleதினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!