VCK-DMK: சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சியின் சார்பில் எதையாவது பேசி கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் போட்டியிட 25 வேண்டும் என விசிக வன்னியரசு கேட்டு இருக்கிறார்.
திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வலுவாக இருக்கும் அரசியல் கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். வட தமிழகத்தில் திமுக வெற்றி பெற விசிக காரணமாக அமைகிறது. தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தலித் மக்களின் ஓட்டு வங்கியாக விசிக விளங்குகிறது. இருப்பினும் தேர்தலில் குறைந்த அளவே தொகுதிகள் விசிகவுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இது வரை ஒரு பொது தொகுதி கூட ஒதுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுகள் விசிக கட்சியினர் மத்தியில் எழுந்து வந்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாக விசிக தலைமை நிர்வாகி வன்னியரசு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் பேசி இருக்கிறார். அதில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க எத்தனை தொகுதிகள் கேட்பீர் என்ற கேள்விக்கு கண்டிப்பாக 25 தொகுதிகள் வாங்குவோம் எனக் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமாவளவனிடம் வன்னியரசு பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் சுதந்திரமாக பேசி இருக்கிறார். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுப்போம் எனக் கூறினார். விசிகவில் தலைமை நிர்வாகிகளுக்கு முரண் இருப்பதை திருமா பதில் உறுதி செய்து இருக்கிறது.
அந்த வகையில் திமுக விசிக கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா விசிக பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த வரிசையில் வன்னியரசு பேசியது இருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் திமுக தலைமை விசிக தரப்பு மீது உச்சகட்ட கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.