திரையுலகில் என்ட்ரி  கொடுத்த வீரப்பன் மகள்! படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்! 

Photo of author

By Rupa

திரையுலகில் என்ட்ரி  கொடுத்த வீரப்பன் மகள்! படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

வீரப்பனின் உண்மை கதையை உருக்கி பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக வீரப்பனின் மகளே ஒரு படத்தில் நடித்துள்ளார். கே .என் .ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து அவரே இயக்கி நடித்திருக்கும் படம் தான் மாவீரன் பிள்ளை. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் நடித்துள்ளார். வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி இப்படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத் தரும் பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் குறித்து வீரப்பன் இரண்டாவது மகள் விஜயலட்சுமி கேட்டபோது அவர் கூறியதாவது,

தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் ஆன விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் என்பதால் நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக  நடிக்க முன் வந்தேன். என்னுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை எழுதி பாடி உள்ளவர் ஆலயமணி.

படத்திற்கு மஞ்சுநாத் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஜூலியன் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இருக்கும் நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.இது வரலாற்று கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என அனைவரும் பேசி வருகின்றனர்.