கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டச்சத்திரம் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

0
316

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்படுவதையோட்டி ஒட்டன்சத்திரம் சந்தையில் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்பிலான காய்கறிகளை வியாபாரிகள் கேரளாவுக்கு வாங்கி சென்றதாக தகவல் வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளில் 60% கேரளாவுக்கும், மீதமுள்ளவை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கேரள வியாபாரிகள் , ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வந்து ஏராளமான காய்கறிகளை லாரிகள் மூலமாக வாங்கி செல்கின்றனர்.

இதனால் இரு தினங்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் களைகட்டியுள்ளது.

மேலும் கேரள மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெண்டைக்காய், சுனாமிகாய், வெள்ளைபயிறு, சேனைக்கிழங்கு ,தட்டப்பயிறு, வெங்காயம் ,முருங்கைக்காய் ஆகியவை விலை உயர்ந்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெண்டைக்காய் கிலோ 27-க்கு விற்றது. ஆனால் நேற்று ரூபாய் 55-க்கு விற்பனை செய்யப்பட்டது. பச்சைபயறு ரூபாய் 60-க்கு விற்பனையானது. கிலோ 30-க்கு விற்ற தட்டைப்பயிறு ,நேற்று ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு தினங்களாக 100 டன்னுக்குக்கும் மேலான காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டதாகவும் ,இந்த ஆண்டு குறைந்த அளவில் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

முதல் நாள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் ,நேற்று ரூபாய் ஒரு கோடிக்கும் மொத்தம் சுமார் 2.5 கோடிக்கும் விற்பனை நடைபெற்று உள்ளது.நாளை தமிழகத்தில் ஊரடங்கு என்பதால் இன்றே கடைசி நாளாக காய்கறிகள் விற்கப்படும்.மொத்தம் 3 கோடி வரை காய்கறிகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக விற்பனை செய்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Previous articleஇன்று (29.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?
Next articleபெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!