வடசென்னை மக்களுக்கு ஒரு அருமையான தகவல்

0
127

வடசென்னை மக்களுக்கு ஒரு அருமையான தகவல்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிவரைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்கறிக் கடையிலும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறித் தொகுப்பு பை ரூபாய் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தக் காய்கறித் தொகுப்பில் தக்காளி ஒரு கிலோ வெண்டைக்காய் கால் கிலோ கத்திரிக்காய் அரை கிலோ அவரைக்காய் ஒரு கிலோ முருங்கைக்காய் நான்கு பச்சை மிளகாய் கால் கிலோ பீன்ஸ் கால் கிலோ கேரட் கால் கிலோ சவ்சவ் ஒன்று உருளைக்கிழங்கு அரை கிலோ சின்ன வெங்காயம் கால் கிலோ பெரிய வெங்காயம் அரை கிலோ கருவேப்பிலை புதினா கொத்தமல்லி ஒரு கொத்து முள்ளங்கி கால் கிலோ கீரை ஒரு கட்டு வாழைக்காய் மூன்று எலுமிச்சை நான்கும் வழங்கப்படுகிறது. இந்தக் காய்கறித் தொகுப்பு பை மக்களிடம் அமோக வரவேற்புப் பெற்றுள்ளது. இதனால் எங்களுக்கு நேரமும் மிச்சம் ஆகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது வடசென்னை மற்றும் ராயபுரம் பகுதிகளில் காய்கறிக் கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க அங்கும் இதே யுக்தியைக் கையாளத் தொடங்கியுள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள் நாளை முதல் காலை ஒன்பது மணி முதல் மன்னிரெண்டு மணி வரை ராபின்சன் மைதானத்தில் காய்கறி தொகுப்பு பை குறைந்த விலையில் விற்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

ஒரு பையில் 13 காய்கறிகள் இருக்கும். வெங்காயம் ஒரு கிலோ தக்காளி ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஒரு கிலோ தேங்காய் இரண்டு கத்திரிக்காய் அரை கிலோ கோஸ் அரை கிலோ வெண்டைக்காய் அரை கிலோ பீன்ஸ் அரை கிலோ கேரட் அரை கிலோ வாழைக்காய் இரண்டு பச்சை மிளகாய் 150 கிராம் இஞ்சி 50 கிராம் போன்றவை அந்தப் பையில் இடம்பெற்றுள்ளது.

சமூக விலகலைக் கருத்தில் கொண்டு அதே சமயம் மக்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த காய்கறித் தொகுப்பு பை குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Previous articleஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு
Next articleஅம்மி அம்மி அம்மி மிதித்து! மீண்டும் உங்களுக்காக!