சைவப் பிரியர்களே இனி நீங்களும் மீன் குழம்பு சாப்பிடலாம!! எப்படினு தெரியுமா?

Photo of author

By Divya

சைவப் பிரியர்களே இனி நீங்களும் மீன் குழம்பு சாப்பிடலாம!! எப்படினு தெரியுமா?

Divya

மீன் சுவையை ஒத்திருக்கும் வாழக்கையில் சுவையான மீன் குழம்பு செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாழைக்காயில் வறுவல்,பொரியல் என்று பல வகை உணவுகள் செய்யப்படுகிறது.அந்த வகையில் வாழைக்காய் வைத்து சைவ மீன் குழம்பு செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைக்காய் – ஒன்று
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு பற்கள் -10
4)தக்காளி – ஒன்று
5)மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
7)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
8)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
9)தேங்காய் துருவல் – அரை கப்
10)சீரகம் – கால் தேக்கரண்டி
11)வெந்தயம் – கால் தேக்கரண்டி
12)எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
13)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் சீரகம்,வெந்தயம் போட்டு பொரிய வைக்க வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயம்,பூண்டு பல்,தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.இவை நன்கு வதங்கி வந்த பிறகு அரை கப் தேங்காய் துருவலை போட்டு நன்கு வதக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடுங்கள்.பிறகு ஒரு வாழைக்காய் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு வாழக்கையை ஓவல் வடிவத்தில் நறுக்கி கொள்ளுங்கள்.மீன் வடிவம் கிடைக்க வாழைக்காய் துண்டுக்கு நடுவில் துளை போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் மண் சட்டி வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள.பிறகு வெந்தயம்,சீரகம் போட்டு பொரிய விடுங்கள்.ஆடுது கறிவேப்பிலை போட வேண்டும்.

பிறகு நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள்.

அதற்கு அடுத்து அரைத்த விழுதை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் மஞ்சள்
தூள்,கொத்தமல்லி தூள்,மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும்.அதற்கு அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

இறுதியாக வாழைக்காய் துண்டுகளை போட்டு குறைவான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.வாழைக்காய் நன்றாக வெந்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இப்படி மீன் குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.