அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

0
281

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

கடலூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஐந்து பேர் பலியாகினர்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  பெரிய செலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது.

மற்றும் ஒரு லாரி ,ஒரு சுற்றுலா, பேருந்து, மற்றும் ஒரு கார் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது இதில் காரில் உள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. கார் பயங்கரமாக நசுங்கி உள்ளதால் மிகவும் கடுமையாக போராடி தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

உடலை கைப்பற்றிய போலீசார் விபத்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 பெண்கள் இரண்டு சிறுவர்கள் ஒரு ஓட்டுனர் என ஐந்து பேர் பலியாக்கியுள்ளனர். அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் காலையிலேயே காணப்பட்டது.

Previous articleநான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!
Next articleதலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here