இனி வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.. மீறுவோருக்கு கட்டாயம் அபராதம்!! வரப்போகும் புதிய ரூல்ஸ்!!

Photo of author

By Rupa

 

High Court: வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்துவது குறித்து போலீசார் எவ்வாறன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையானது காற்று மாசை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக உயர் நீதிமன்றம் இவ்வாறான வாகனங்கள் மீது அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை போலீசாரும் இதனை சோதனை செய்யும் வகையில் குழு அமைத்து வாகனங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி வாகன புகை குறித்து தணிக்கை சான்றிதழ் குறித்த விசாரணை செய்து அதீத புகை கொடுக்கும் வாகனங்கள் மீது அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இதனையடுத்து சென்னையில் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் தெருவில் பல சாலையோர கடைகள் உரிமமின்றி இயங்குவதாகவும் இதனால் பல கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர் என உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மேற்கொண்டு இவ்வாறு நிறுத்துவதால் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வாறு சாலையோர கடைகள் உரிமம் இன்றி இயங்கினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இவ்வாறன தவறுகள் நடக்கும் பட்சத்தில் போக்குவரத்து துறை எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளது.