வேலூரில் பரபரப்பு ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

Photo of author

By CineDesk

வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு அவர் சமூகத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்தில் சென்றார் அந்த பெண். அப்பொழுது வாணியம்பாடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது உடன் பயணம் செய்த ஜெகன் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண் கழுத்தில் கட்டினார் இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த பெண் கூச்சலிடவே இதனை அடுத்து ஜெகனை பிடித்த சக பயணிகள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர்

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலிகட்டிய விவகாரம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.