வாக்கு எண்ணும் இடத்தில் திடீர் பரபரப்பு! என்ன நடக்கிறது! வேலூர் தேர்தலில்?

0
212

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன.

திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வந்தார். இருவருக்குமே இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருக்கிறது.

காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், திடீர் திருப்பமாக காலை 11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377  வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். 12 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்4தமிழ் என்ற இணைதலதில் காணலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஅதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் ! எத்தனை வாக்குகள் முன்னிலை தெரியுமா?
Next articleஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here