பாரதியை குழப்ப திட்டமிடும் வெண்பா!! அடுத்தகட்ட பரபப்புடன் பாரதி கண்ணம்மா!!

Photo of author

By CineDesk

பாரதியை குழப்ப திட்டமிடும் வெண்பா!! அடுத்தகட்ட பரபரப்புடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில்  திடீர் திருப்பமாக நடந்ததை பார்த்த ரசிகர்களின் கவனம் இந்த சீரியல் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அந்தத் திருப்பம் என்னவென்றால் சில குழப்பத்தினால் தன் காதல் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான் பாரதி.

மேலும் வீட்டை விட்டு நிறை மாத கர்ப்பிணியாக வெளியே செல்லும் கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தையை பாரதியின் தாய் தன் வீட்டிற்கு எடுத்து வந்து விடுகிறாள். இன்னொரு குழந்தையை கண்ணம்மாவே வளர்க்கிறாள். ஆனால் கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது என்று பாரதியின் தாயைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் தத்து எடுத்து வந்த குழந்தை போல தன் வீட்டில் வைத்து பாரதி இடம் கொடுத்து வளர்கிறாள். இதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு நாடகத்தை கடந்து செல்கின்றனர். இதில் இரண்டு குழந்தைகளுமே தனித்தனியாக வளர்க்கின்றனர்.

வழக்கம்போல் அனைத்து சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரமாக வில்லி கதாபாத்திரம் இருக்கும். இந்த சீரியலிலும் வெண்பா கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மேலும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிய இந்த வெண்பா கதாபாத்திரம் தான் காரணமாக இருந்தது. வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளவே கண்ணம்மாவின் மேல் பழி சுமத்தி அவளை வீட்டை விட்டு வெளியேறுமாறு செய்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது 8 வருடத்திற்கு பிறகும் அவளின் ஆட்டம் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அவ்வப்போது சந்தித்து கொள்ளும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கோபம் இருக்கிறாள் வெண்பா.  இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் படப்பிடிப்பின் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாரதி மற்றும் வெண்பா இருவரும் தனியாக சந்தித்து பேசிக் கொள்ளும் காட்சியை போல் தெரிகிறது. இதை பார்க்கும் பொழுது பாரதியை மீண்டும் தன்யப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவனை குழப்ப ஏதோ ஒரு திட்டத்தை தீட்டும் காட்சி வெளியாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.