பாரதியை வளைச்சு போட அடுத்த நாடகத்தை ஆரம்பித்த வெண்பா!! காட்சிகள் வெளியான வீடியோ!!

Photo of author

By CineDesk

பாரதியை வளைச்சு போட அடுத்த நாடகத்தை ஆரம்பித்த வெண்பா!! காட்சிகள் வெளியான வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் நாளுக்கு நாள் டிஆர்பியை ஏற்றிக் கொண்டே வருகிறது. இந்த நாடகத்தை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த நாடகம் ஏழை மருமகள் மற்றும் பணக்கார வீட்டு பையனை மையமாக கொண்டது. ஏழைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட பணக்கார வீட்டு பையன்.

https://www.instagram.com/reel/CSFOxRIhW1K/?utm_source=ig_web_button_share_sheet

அந்த திருமணம் பிடிக்காத பையனின் தாயார். இவ்வாறு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத ஓடிக்கொண்டிருந்த இந்த நாடகத்தில் திடீர் திருப்பமாக தன் காதல் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டான் பணக்கார வீட்டுப் பையனான பாரதி. இந்த திருப்பத்தில் இருந்து நிகழ்ச்சியின் பரபரப்பு ஆரம்பித்தது. அதிலிருந்து சீரியல் தொடர்ந்து டிஆர்பி உயர்த்தி கொண்டு வருகிறது. இந்த நிலையில் என்ன தான் கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஒரு சீரியலில் இருந்தாலும், அந்த சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரத்திற்கு ஒரு தனி சிறப்பு தான். அந்த வகையில் இந்த நாடகத்தில் வில்லியாக வென்பா கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த கதாபாத்திரம் நாடகத்தின் கதாநாயகனின் தோழி ஆவார்.

மேலும் இவர் கடந்த 8 வருடமாக பாரதியை வளைத்துப் போட திட்டம் தீட்டி வருகிறார். மேலும் தன் காதல் மனைவியை சந்தேகப்பட வைத்தது கூட இவளின் சூழ்ச்சி தான். தற்போதும் கூட பாரதியை வளைச்சு போட மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டி உள்ளார். அது என்னவென்றால் தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை கட்டி உதைப்பது போல் ஒரு காட்சி வலை தளத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்ததும் கண்டிப்பாக பாரதியின் மனதை குழப்ப ஏதோ திட்டம் தீட்டுவது போல் தான் தெரிகிறது. இனி வரும் நாட்களில் பாரதியும் கண்ணம்மாவும் எப்படி இணையப் போகிறார்கள் வில்லியின் சூழ்ச்சி எப்பொழுது தெரியவரும் மேலும் என்னென்ன நடக்கும் என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.