High Court: ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடு உள்ளது. இதனால் எப்பொழுதும் தமிழக அரசு கொடுக்கும் தீர்மானங்களை கண்டு கொள்வதில்லை. மேற்கொண்டு தமிழக அரசு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது ரீதியான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது.
அந்த வழக்கானது அமர்வுக்கு வந்து, நீதிபதிகள் கவர்னருக்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதாவது சட்டப்பேரவை மூலம் வழங்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தன்னிச்சையாக செயல்பட எந்த ஒரு மாநிலத்தில் உள்ள ஆளுநருக்கு உரிமை இல்லை எனக் கூறியுள்ளனர். இதே போல தான் டெல்லியில் ஆம் ஆத்மி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்வது நியமனம் செய்வது ரீதியான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலேயே இருந்துள்ளார்.
மேற்கொண்டு சிறப்பு அதிகாரமான 142 சட்ட விதியை பயன்படுத்தி இதன் முழு சுதந்திரத்தை டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்தது. ஆனால் இதனை பொறுக்க முடியாமல் மத்திய அரசானது மாநில அரசின் உரிமையை கவர்னர் மூலம் பறிக்கும் வகையில் அவசர சட்ட திருத்தத்தை இதற்கு எதிராக கொண்டு வந்தது. மேற்கொண்டு அதன் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசு மூலம் பரித்தனர். அதேபோல தமிழக கவர்னருக்கு எதிராக தற்பொழுது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவசர சட்ட திருத்தம் ஏதேனும் மோடி கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.