சென்னை உள்ளபட 18 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

Photo of author

By Vinoth

தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 18  மாவட்டங்களுக்கு இன்று இரவு மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.