Gold News: தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகின்ற நிலையில் சில தினங்களுக்கு முன் தங்கம் விலை சரிவை நோக்கி வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தங்கம் விலை குறைந்து விடும் என எண்ணினார்கள். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் வேதனையில் உள்ளார்கள்.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை 22 கேரட் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலை இல்லாமல் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை சுமார் ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்பட்டு, வரலாறு காணாத அளவுக்கு உச்சம் நிலையை தொட்டது. அதற்கு பிறகு சில நாட்கள் சரிவை நோக்கி சென்றது. மீண்டும் தங்கம் விலை உயர்த்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி விலை உயர்ந்து செல்வதை பார்த்து மக்கள் வேதனையில் உள்ளார்கள்.