ரொம்ப கவலையா இருக்கு!! நடிகை அசின் விவாகரத்து குறித்து உருக்கம்!!

Photo of author

By Sakthi

ரொம்ப கவலையா இருக்கு!! நடிகை அசின் விவாகரத்து குறித்து உருக்கம்!!

Sakthi

Very worried!! Actress Asin's divorce is hot!!

ரொம்ப கவலையா இருக்கு!! நடிகை அசின் விவாகரத்து குறித்து உருக்கம்!!

பிரபல நடிகை அசின் அவர்கள் விவாகரத்து குறித்து உருக்கமாக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2001ம் ஆண்டு வெளியான ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா, என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகை அசின் அறிமுகமானார். அதன் பின்னர் 2003ம் ஆண்டு வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு மொழியிலும் அறிமுகமானார். அதன் பின்னர் 2004ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படம் மூலமாக தமிழ் மொழியிலும் அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் அஜித், நடிகர் விஜய், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூரியா, நடிகர் விக்ரம் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை அசின் கடைசியாக நடிகர் விஜய் நடித்து 2011ம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

காவலன் திரைப்படத்திற்கு பிறகு 5 ஹிந்தி படங்களில் நடித்தார். 2015ம் ஆண்டு வெளியான ஆல் இஸ் வெல் என்ற ஹிந்தி படமே கடைசி திரைப்படம் ஆகும். 2016ம் ஆண்டு ராஹுல் சர்மா என்பவரை திருமணம் செய்த பிறகு திரையுலகில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  தற்பொழுது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை அசின் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அழித்துவிட்டதால் நடிகை அசின் அவர்கள் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவியது. இதையடுத்து நடிகை அசின் தனது விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை அசின் பகிர்ந்துள்ள அந்த பதிவில் “கோடை கால விடுமுறையை அனுபவித்துக் கொண்டு நானும் எனது கணவரும் காலை உணவை அருந்திக் கொண்டிருக்கும நேரத்தில் ஒரு கற்பனையான ஆதாரமற்ற செய்தியை பார்த்தோம். எங்களின் இந்த விடுமுறையில் 5 நிமிடத்தை வீணாக்கியதற்காக வருந்துகிறேன். இன்னும் சிறந்த முறையில் எதையாவது முயற்சி செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.