படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

0
171

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் முழுப்படப்பிடிப்பும் கதார் நாட்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் தமிழின் முக்கியமான நாவலான வாடிவாசலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் தமிழர்களின் துயர வாழ்வை சொல்லும் படமாக உருவாக இருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை அஜ்னபி என்ற நாவலை மையப்படுத்தி உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக தமிழர்கள் பிழைப்புக்காக அதிகமாக செல்லும் நாடான கத்தாரில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

இதற்கான விசா பெறும் பணிகளை இப்போது தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. விசா கிடைத்தவுடன் படக்குழுவினர் கதார் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleவன்முறையையும் அரசியல் கொலையையும் நிறுத்துங்கள் அரசுக்கு ஆளுநர் அறிவுரை
Next articleதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!