வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

Photo of author

By Parthipan K

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

Parthipan K

Updated on:

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் பற்றி ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் விதமாக மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவரிடம் அந்த படம் பற்றி கேள்வி எழுப்பியபோது அந்த படத்துக்கு வாடிவாசல் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினார். இதனால் இந்த படம் ஜல்லிக்கட்டு சம்மந்தமானது என உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து தனது திரைக்கதைகளை நாவல்களை ஒட்டி அமைத்து வரும் வெற்றிமாறன், இந்த முறையும் ஒரு நாவலைதான் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தெரிகிறது. வாடிவாசல் என்ற பெயரில் எழுத்தாளர் சி சு செல்லப்பா ஒரு நாவல் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மையம் தலித் இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிக்கும் படத்துக்கு முன்னதாக சூரியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முய்ற்சியில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார்.