“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

0
170

“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருமே தேசிய விருதுகளை வென்றனர்.

இவர்கள் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது. அதில் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில் இரண்டாம் பாகம் இடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்குள் இருவரும் மற்ற படங்களில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் வடசென்னை 2 எப்போது உருவாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை மற்றும் அடுத்து இயக்க உள்ள வாடிவாசல் ஆகிய திரைப்படங்களை முடித்த பின்னர் வடசென்னை 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பாகம் 2 க்காக சில காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் ராஜன் வகையறா என்ற வெப் சீரிஸையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleடி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்!
Next articleமீண்டும் இணையும் செல்வராகவன் & கலைப்புலி தாணு…. தனுஷ் இருக்காரா?