விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்!

0
168

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்!

விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் அமீர்ஜான் இயக்கி இருந்தார்.

விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் ரகுவரன் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் அமீர்ஜான் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சந்திரமுகி படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் இமாலய வெற்றியால் அப்போது இந்த படம் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் அதன் பிறகு தொலைக்காட்சியிலும் இணையத்தின் வரவுக்கு பிறகும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக விஜய்- ஜெனிலியா மோதல் காதல் காட்சிகளும், விஜய் – வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை பெற்றுள்ளன.  அதுமட்டுமில்லாமல் விஜய் கடைசியாக நடித்த காதல் திரைப்படங்களில் சச்சின் திரைப்படமும் ஒன்று.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக இந்த படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

இவர் தயாரித்த ஆளவந்தான் திரைப்படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரிசையாக தன்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!
Next articleஒரே ட்விட் மொத்த மானமும் போச்சு! பாஜகவால் கதறும் திமுக!