விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

0
243
Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?
Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிப்பில் வெளியான படம் துணிவு மற்றும் வாரிசு.இந்த படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான அளவில் தான் விமர்சனக்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தியேட்டர் பங்கீடும் முன்பு கூறியது போல சம அளவிலேயே இருந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நேரடியாக மோதுகிறார்கள் என்பதினால் பிரபலங்கள் பலரும் தியேட்டரில் வந்து படம் பார்த்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அந்தவகையில் படங்கள் வெளியான உடனே தியேட்டருக்கு சென்று த்ரிஷா மற்றும் நேற்று ரஷ்மிகா மந்தனா ஆகியோரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க சென்றனர்.

இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.அவர்கள் இருவரும் துணிவு படத்தை பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த போட்டோ தற்போது வைரலாகி  வருகின்றது.மேலும் விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் துணிவு படத்தை பற்றி பதிவிட்டு இருக்கிறார். மேலும் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!
Next articleதமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!