நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது நோக்கியோ தான். மக்கள் அனைவரும் முதலில் இருந்து நோக்கியோ செல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது எண்ணற்ற கம்பெனிகள் உருவாகிவிட்டது. அதில் ஒன்றுதான் ஓப்போ. அனைத்து நிறுவன்களும்
தங்கள் உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டில் ஒப்போவிற்கு நோக்கியாவினால் அத்தகைய உரிமம் வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், ஓப்போ நிறுவனத்திற்கு நோக்கியோ வழங்கிய உரிமம் ஜூன் 2021 இல் காலாவதியாகிவிட்டது. நீண்ட காலமாக இந்த உரிமத்தை ஓப்போ புதுப்பிக்கவில்லை என்று நோக்கியா குற்றம் சாட்டியுள்ளது. இன்னும் உரிமத்தைப் புதுப்பிக்காமல் நோக்கியாவின் காப்புரிமையைப் பயன்படுத்தி வந்த ஓப்போவுக்கு எதிராக நோக்கியா நீதிமன்றத்தை அணுகியது.
2021 ஆம் ஆண்டில், பின்லாந்தை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான நோக்கியா, ஓப்போ நிறுவனம் மீது காப்புரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்தது.
ஓப்போ நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்துள்ளது. காப்புரிமையைப் பயன்படுத்த சில நிறுவனங்களுக்கு நோக்கியா நிறுவனம் உரிமங்களை வழங்குகிறது. இந்த உரிமங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
நோக்கியோ நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களான ஸ்டாண்டர்ட் எசென்ஷியல் காப்புரிமைகள் (SEPs) மற்றும் உரிமம் இல்லாமல் SEP ஆகியவற்றை ஓப்போ நிறுவனம் பயன்படுத்துகிறது.
இந்த வழக்கு ஜெர்மனியில் தொடரப்பட்டது. 4ஜி/5ஜி காப்புரிமை மீறல் வழக்கில் நோக்கியாவின் நலன் கருதி ஒரு முடிவை எடுத்து, மேன்ஹெய்ம் பிராந்திய நீதிமன்றம், இப்போது ஜெர்மனியில் ஓப்போ மற்றும் அதன் சகோதர நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனத்தைத் தடை செய்துள்ளது. அதாவது, Oppo மற்றும் OnePlus சாதனங்களை இனி ஜெர்மனியில் வாங்க முடியாது.
Oppo மற்றும் OnePlusக்கு தடை 4ஜி மற்றும் 5 ஜி காப்புரிமை மீறல் வழக்கில் Oppo மீது வழக்கு தொடர்ந்திருந்த நோக்கியா நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
நோக்கியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், Oppo மற்றும் OnePlus ஐ தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் நோக்கியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.