விடாமுயற்சி:
அஜித் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ரெஜினா கெசென்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தேன் எனக்கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
சினிமாவை விட்டே போய்விடலாம்:
அதாவது, நான் மிகவும் இளம் வயதாக 14 வயதிலே சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது இந்த சினிமா துறை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஒரு குழந்தை போல தான் சினிமாத்துறைக்கு நான் வந்தேன். இது இவ்வளவு பெரிய உலகம் இதில் எப்படி ட்ராவல் பண்ண வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது.
சில சமயங்களில் 2016 காலகட்டத்தில் நான் சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு எனக்கு இந்த துறையின் மீதும் இந்த தொழில் மீதும் பெரிதாக புரிதல் இல்லை. ஆனால், இப்போது நான் இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பேன் இருக்கிறேன் என்று நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை என நடிகை ரெஜினா கூறியிருக்கிறார்.