அஜித்தின் விடாமுயற்சி படமானது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து வெளிவர இருப்பதால் ரசிகர்கள் ஆரவாரமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விடாமுயற்சி திரைப்படமானது பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது பொங்கலன்று சொன்னபடி படம் வெளியாகாது என்றும் பட ரீதியாக சில வேலைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்து பார்க்கையில், இந்தியாவில் படம் வெளியிடுவதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். இதுவே வெளிநாட்டில் வெளியாகும் பொழுது பல பேப்பர் சம்பந்தப்பட்ட வேலைகள் இருந்துள்ளது. குறிப்பாக இதில் பல காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதற்குரிய சென்சார் வாங்குவதற்கு முன் பேப்பர் சம்பந்தப்பட்ட வேலைகள் முடித்திருக்க வேண்டும்.
ஆனால் வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் அலுவலகம் விடுமுறை என்பதால் இது குறித்த வேலையானது நீண்டு கொண்டே உள்ளது. அதனால்தான் இப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் என கூறுகின்றனர். படம் ரிலீஸாகாத குறித்து ரசிகர்களை காட்டிலும் அஜித் மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். குறிப்பிட்ட ஒரு பாட்டிற்காக குட் பேட் அட்லீ திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து தனது பிசி ஷெட்யூலில் விடாமுயற்சியின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தாராம்.
குறிப்பாக அச்சமயத்தில் இவருக்கு உடல் ரீதியான பிரச்சனை இருந்ததாகவும் அதைக் கூட பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்து கொடுத்ததாக அப்படத்தில் வேலை பார்த்த நடன இயக்குனர் கூறியிருந்தார். அதேசமயம் ரஜினி புத்தாண்டு வாழ்த்தோடு, பாட்ஷா பட வசனமான நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான் என்று சேர்த்து பதிவிட்டுள்ளார். இது அஜித்திற்கு பொருந்தும் படியாக உள்ளதால் இது அவருக்கு தான் கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.