பள்ளி மாணவர்கள் கட்டிட வேலை பார்க்கும் அவல வீடியோ!! பெற்றோர்கள் அதிர்ச்சி !!

0
141
Video of school students watching construction work!! Parents shocked!!
Video of school students watching construction work!! Parents shocked!!

பள்ளி மாணவர்கள் கட்டிட வேலை பார்க்கும் அவல வீடியோ!! பெற்றோர்கள் அதிர்ச்சி !!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்கு பள்ளிகளில் இலவச புத்தகம் ,உடைகள் ,உணவு போன்ற அனைத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

தொலைதுர  அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இலவச பேருந்து வசதியும் வழங்கப்படுகின்றது.இதுபோன்ற பல திட்டங்களை செய்து வருகின்றது தமிழக அரசு.

இந்த நிலையில் இவை அனைத்தையும் வீணாக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்கள் கட்டிட வேலை பார்ப்பது போன்று ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் பள்ளியில் மொத்தம் 87 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகின்றார்.

இந்தநிலையில் அந்த பள்ளியில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ள நிலையில் அதனை மேமபடுத்துவதற்காக தமிழக அரசானது ரூ.20 லட்சம் தொகையை அந்த பள்ளியின் கட்டிட பணிக்காக ஒதிக்கியுள்ளது .

மேலும் அதற்கான பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இந்த நிதியை வைத்து தலைமை ஆசிரியர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

 தலைமை ஆசிரியர் சரவணன் அந்த பணத்திற்கு ஆசை பட்டு பள்ளி மாணவர்களை வைத்தே கட்டிட பணியை செய்து வந்துள்ளார். இவ்வாறு கட்டிட பணியை செய்த மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெற்றோரையும் ,பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இது போன்று இவர்கள் செய்யும் தவர்களால் அரசு பள்ளியில் படிப்பதை மாணவர்களும் ,பெற்றோர்களும் பெரிதும் விரும்புவது இல்லை.இது போன்ற செயலால் பள்ளி மாணவர்களுக்கு என்று அரசு செய்யும் அனைத்து திட்டமும் வீணாகின்றது.

Previous articleதயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!! 
Next articleதொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!!