#சீமான்ணேரூம்போட்டியா சீமானுக்கு எதிராக வெளியான வீடியோ! அதிர்ச்சியில் தொண்டர்கள்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி,அமமுக மற்றும் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.இதில் நாம் தமிழர் கட்சி இதுவரை கூட்டணியே இல்லாமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதனாலேயே இக்கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்கு சதவீதத்தை பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை தாண்டி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.இந்நிலையில் அவர் மேடையில் பேசுவது போல நடந்து கொள்வதில்லை என்ற வகையில் அவருடைய ஆதரவாளராக இருந்தவர் குற்றம் சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் என்னும் ஆளுமை என்ற புத்தகத்தை எழுதி அவருக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர் அருளினியன் தான் இந்த குற்றசாட்டை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது.
தாங்கள் சீமானை பெரிதாக நம்பினோம் .ஆனால் அவர் அப்படி இல்லை. உண்டியலில் பணம் வசூலித்து கட்சி நடத்துகிறோம். ஆனால் சீமான் ஆடம்பரமாக இருக்க ரெட்டிசன் ப்ளூ ஹோட்டலில் ஜிம் வசதியோடு தங்க 14 ஆயிரம் வாடகைக்கு ரூம் கேட்கிறார். கட்சி நடத்த அவரா பணம் தருகிறார்? அல்லது அவரது தாய், தந்தை பணத்தை கொடுத்தாரா? மேடையில் தான் சுடுகாட்டில் படுத்து தூங்கியவன் என பேசுவார். ஆனால் நிஜத்தில் ஆடம்பரமாக தங்க சொகுசு அறைகேட்கிறார் என அருளினியன் அந்த வீடியோவில் கொந்தளித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூவா வாடகை உள்ள 5 ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்குவாராம்.
அதுல ஜிம் வேற இருக்கனுமாம் 😁
இவனெல்லாம் தமிழ்தேசிய அதிபராம் !!
சீமானுக்கு எதிராக மானத்தம்பியின் மனக் குமுறல்.#சீமான்ணேரூம்போட்டியா pic.twitter.com/ZfzJ97HayF
— சமூக ஆய்வாளன்© #தமிழ்நாடு (@socialaayvalan) April 7, 2021
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய பலரும் இது போன்ற குற்றசாட்டுகளையே கூறிய நிலையில் அருளினியன் அவர்களின் இந்த குற்றசாட்டு அதையெல்லாம் மீண்டும் ஒருமுறை அக்கட்சியின் தொண்டர்களுக்கு நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இதனையடுத்து இந்த குற்றசாட்டை மையப்படுத்தி #சீமான்ணேரூம்போட்டியா என்ற ஹேஷ்டேக்கில் அவரது எதிர்ப்பாளர்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Naai Tumblr chief's Leaked conversation with cadres 🤣🤣🤣#சீமான்ணேரூம்போட்டியா pic.twitter.com/X4dBT6IxLI
— Troll Mafia (@offl_trollmafia) April 7, 2021
#சீமான்ணேரூம்போட்டியா https://t.co/4WkqTJtNwb
— புகழ் அரசன் ( Pugal Arasan ) புன்னகை அரசன் (@Arasan3Pugal) April 8, 2021
அந்தவகையில் சீமானை விமர்சித்து அவர்கள் பதிவிட்ட #சீமான்ணேரூம்போட்டியா ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.