டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்து சமந்தா வெளியிட்ட வீடியோ!

Photo of author

By Kowsalya

பல்வேறு சர்ச்சைகளில் இடையே சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 பாராட்டுகளையும் அள்ளி குவித்து தான் வருகிறது. இது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கேரக்டர் என்று தமிழ் மக்களால் எதிர்க்க பட்டாலும் ஃபேமிலி மேன் 2 சமந்தா நடித்த ஈழத் தமிழ் போராளி என்ற கேரக்டர் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/CPznNvHLz61/?utm_source=ig_web_copy_link

சமந்தா நடித்த OTT- யில் ரிலீஸான முதல் படம் இதுதான். இது அமேசான் ப்ரைம்லும் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ஒரு வெப்சீரிஸ், இது ஷாரீப் ஹஸ்மி பிரியாமணி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அதிகமான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பல காட்சிகளில் சமந்தா டூப் எதுவும் போடாமல் அனைத்து காட்சிகளிலும் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் எதிலுமே டூப் போடாமல் அவர் நடித்துள்ளது பலரும் அந்த வீடியோவை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் அவர் டூப் போடாமல் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் தனக்கு ஸ்டாண்ட் பயிற்சி அளித்த யானிக் பென்னிர்க்கு நன்றியும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் மாடியில் இருந்து குதித்து சமந்தா ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்த காட்சிகளுக்கு அனைவரும் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.